Wed. Sep 18th, 2024

மீன் விலை உயா்வு, கிளிநொச்சி, முல்லைத்தீவில் மக்கள் விசனம்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீன் விலை சடுதியாக உயா்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனா ல் மக்கள் பொிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கிலோ ஒன்று 400 ரூபா முதல் 500 ரூபா வரை சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகள் தற்போது 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றன.

அதேபோல 300 ரூபாவிற்கு குறைவாக விற்பனை செய்யப்பட்ட மீன்வகைகள் தற்போது ஒரு கிலோ 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றன.

தற்போது அதிகளவான குடும்பங்கள் தொழில் வாய்ப்புக்கள் இல்லாத நிலையிலும் வருமானமற்ற நிலையிலும் வாழ்ந்து வரும் நிலையில் இவ்வாறு  கடலுணவுகள் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனை விட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பிடிக்கப்படும் கடல் மீன்கள் கடலுணவுகள் இரணைமடுக்குளம்  உள்ளிட்ட குளங்களில் பிடிக்கப்படுகின்ற

நன்னீர் மீன்கள் என்பன தென்பகுதிக்கே ஏற்றுமதி செய்ய்படுகின்றன. இதனாலே நன்னீர் மீன்வகைகள் கடலுணவுகள் என்பவற்றின்  விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்