Sun. Sep 8th, 2024

மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்த்தா் சடலமாக மீட்பு..!

முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பகுதியில் உள்ள குமாிக்குளத்தில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்த்தா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா்.

குறித்த குளத்திற்கு நேற்று மீன்பிடிக்க சென்ற நபர் வீடு திரும்பாத நிலையில் அயலவர்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை குறித்தநபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனிக்குளத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தம்பிராசா சுரேஷ்வரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்