Sat. May 16th, 2026

மீண்டெழும் பருத்துறை துறைமுகம். புனரமைப்பு பணிகளை தொடக்கிவைத்தாா் ஜனாதிபதி.

யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா பருத்துறை துறைமுக புனரமைப்புக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளாா்.

நாட்டிற்காக ஒன்றிணைவோம் வேலை திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆர ம்பிக்க இன்று ஜனாதிபதி யாழ்.வந்துள்ளாா்.

இந்த விஜயத்தின்போதே ஜனாதிபதி துறைக அபிவிருத்திக்கான அடிக்கல்லை நாட்டிவைத்துள்ளாா்.

விவசாயம் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சும் மற்றும் ஆசிய வங்கியின் 13 ஆயிரத்து 500 பில்லியன் ரூபாய் நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பருத்துறை

துறைமுகத்திற்கான பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்ததுடன், அடிக்கல்லினை நாட்டி வைத்தார். இந்த நிகழ்வில்,

விவசாயம் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ஹரிசன் பெர்ணான்டோ மற்றும் வட.மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ சுமந்திரன், த.சித்தார்த்தன்,

அங்கஜன் இராமாநாதன், மஸ்தான் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், நீரியல்வளத்துறை அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

About The Author

Share This:

Leave a Reply

You may have missed