மீண்டும் 32 ரக ஒக்டேன் பெற்றோலின் விலையில் மாற்றம், ஒரு ரூபாவினால் மட்டும் குறைப்பு
மீண்டும் எரிபொருளின் விலையில் நிதி அமைச்சு மாற்றம் செய்துள்ளது. இதன்படி 92 ரக பெற்றோலின் விலையை ஒரு ரூபாவினால் மாத்திரம் குறைத்துள்ளதாக நிதியமைச்சு மறு அறிவிப்பு விடுத்துள்ளது.
அதன்படி ஒரு லீட்டர் 32 ரக ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 137 ரூபாவாகும்
இன்றி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் மற்றும் எரிபொருள் விலையை நிதி அமைச்சு குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது . அதன்படி 92 ரக பெற்றோலின் விலையை 2 ரூபாவினால் குறைத்ததாக முன்னர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது