Mon. Oct 7th, 2024

மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் வைத்தியர்கள்

10 கோரிக்கைகளை முன்வைத்து நாளை செவ்வாய்கிழமை 4 மணித்தியால வேலைநிறுத்தத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் Dr பிரசாத் தெரிவித்தார்.

நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிமுதல் பகல் 12 மணி வரை இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் பற்றாக்குறை, பதவி உயர்வு,பணி இடமாற்றம், பயிற்சி பெறுதலில் காணப்படுகின்ற குறைபாடுகள், தரமற்ற மருந்துகள் உள்ளிட்ட பத்து கோரிக்கைகளை முன்வைத்தே பணிபகிஷ்கரிப்பு இடம்பெறவுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதான வைத்தியசாலை,கண்டி வைத்தியசாலை, கராப்பிட்டி போதனா வைத்தியசாலை, உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகளில் வேலைநிறுத்த போராட்டத்துடன் ஆர்ப்பாட்டங்களையும் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்