மீண்டும் விமனநிலையத்துக்காக காணி கையகப்படுத்தல், போராடப்போகுதாம் கூட்டமைப்பு
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகலின் போது பொதுமக்களின் 349 ஏக்கர் காணிகள் 1950 – 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கையகப்படுத்தப்பட்டதாகவும் , 716 பேர் இக்காணிகளின் உரிமையாளர்களாக இருந்துள்ள போதும் , அவர்களில் 215 பேருக்கு மாத்திரமே இழப்பீடு கிடைத்திருப்பதாகவும் , மேலும் 1984 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இரண்டாம்கட்ட அபிவிருத்திப் பணிகளின் பொழுது 397 உரிமையாளர்களின் 64 ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டதாகவும், அவர்களுக்கான இழப்பீடுகள் உறுதிப்படுத்தப்பட்டள்ள போதிலும் இதுவரையில் அவை வழங்கப்படவில்லை என்றும். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள செல்வம் அடைக்கலநாதன் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்படுவதென்பது வரவேற்கத்தக்க விடயமாக உள்ளபோதிலும் இவ்விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டாலோ அல்லது மக்களுக்கு எவ்விதத்திலேனும் இடையூறு ஏற்படுத்தப்பட்டால்
தமிழ் கூட்டமைப்பு நிச்சயம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த வாரம் இது தொடர்பாக கருது வெளியிட்ட விமான போக்குவரத்துக்கு அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கையகப்படுத்தப்படும் காணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் கூட்டமைப்பின் வாய்ச்சவடால் என்பது அவர்களின் சொந்த தேவைகளை அரசாங்கத்திடம் பெற்று நிறைவு செய்வதிலேயே உள்ளது என்றும், இதுவரை உருப்படியான எந்த தீர்வும் இவர்கள் போராடிப்பெற்றதில்லை என்று மக்கள் விசனம் வெளியிட்டுவருவது இவர்களின் காதுகளுக்கு ஏனோ செல்வதில்லை என்று மக்கள் கவலை கொள்கிறார்கள்