மீண்டும் பேய் படத்தில் இறங்கும் சுந்தர்.சி
மீண்டும் பேய் படம் ஒன்றை சுந்தர்.சி. இயக்கவுள்ளார். இவர் அரண்மனை, அரண்மனை இரண்டாம் பாகம் என ஏற்கெனவே பேய் படத்தை உருவாக்கி நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதேபோல் தனது இயக்கத்தில் தானே சில பட்கங்களில் கதாநாயகனாக நடித்த படங்கள் பெருமளவு வெற்றியை தராவிடினும் திரையரங்குகளில் சுமாராக ஓடியது.
இவர் கார்த்திக்கை வைத்து இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா எனும் நகைச்சுவை படம் மற்றும் அர்ஜுன் நடிப்பில் ” கிரி” ஆகிய படங்கள் சக்கை போடு போட்டது.
இவர் தற்போது விசாலை வைத்து “ஆக்சன் ” படத்தை உருவாக்குகிறார். அப்படம் நிறைவடைந்ததும் மீண்டும் பேய் படத்தில் இறங்கும் சுந்தர் சி.