Sat. Jul 13th, 2024

மீண்டும் செவ்வாய்க்கிழமை அதிபர் ஆசிரியர்கள் சுகயீன லீவு போராட்டம்

அதிபர், ஆசிரியர்கள் தமது சம்பள உயர்வை தீர்க்க வலியுறுத்தி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 9ம் திகதி மீண்டும் சுகயீன லீவு போராட்டம் நடைபெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் அறிவித்துள்ளார்.
கொழும்பு பொது நூலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரச ஊழியர்களின் தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு இணங்க எதிர்வரும் 8ம் 9 ம் திகதிகளில் அரச ஊழியர் தொழிற்சங்கங்கள் இணைந்து சம்பள உயர்வு கோரி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளன.
இதன்போது – அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க வலியுறுத்தி எதிர்வரும் 9ம் திகதி அதிபர், ஆசிரியர்கள் மீண்டும் சுகயீன லீவுப்போராட்டத்தில் ஈடுபடுவதென அதிபர்
, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
எனவே எதிர்வரும் 9ம் திகதி நாடுதழுவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்களின் சுகயீன லீவுப் போராட்டம் நடைபெறவுள்ளது இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்