மீசாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் பலி
மீசாலை பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்தது. மீசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற சம்பவத்தில் இத்தாவில் பகுதியை சேர்ந்த 28 வயதான ரஜிதரன் என்பவரே பலியாகியுள்ளார்.
கயமைடந்த நிலையில் வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டிமூலம் எடுத்துச்செல்லும் வழியிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி பொலிஸார் விபத்துத்தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்கள்