Sun. Apr 12th, 2026

மீசாலையில் பெண்ணின் சங்கிலி அறுப்பு

மோட்டார் சைக்கிளில் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்ற பெண்ணின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் அறுத்து சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் மீசாலை – டச்சு வீதி ஊடாக தனது பிள்ளையை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு பெண்ணொருவர் அழைத்து சென்ற வேளை அவர்களை பின் தொடர்ந்து பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் வைத்து பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed