மிஸ் இந்தியாவாகிய கீர்த்தி சுரேஷ்
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டீசெர் இன்று வெளியாகி உள்ளது. நரேந்திர நாத் இயக்கி மகேஷ் எஸ் கொனேரு தயாரிக்கும் கீர்த்தி சுரேஷின் வரவிருக்கும் படத்திற்கு “கீர்த்தி 20” என்று அழைத்து வந்தனர். தற்போது இப்படத்திற்கு ‘மிஸ் இந்தியா’ என்று பெயர் வைத்து டைட்டில் டீசெர் வெளியிட்டிருக்கிறார்கள்.
2018 ல் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார்’ ஆகிய படங்கள் வெளியானது. இப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்’ சூப்பர் ஹிட்டானது. 2018 ல் நடிகையர் திலகமகா ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி 2019 ல் ‘மிஸ் இந்தியா’ அவதாரம் எடுத்திருக்காங்க.
இந்த படத்திற்காக தான் கீர்த்தி சுரேஷ் சைஸ் ஸிரோக்கு ஸ்லிம் ஆகியிருப்பாங்க போலை இருக்கு. முக்கியமான காட்சிகள் ஸ்பெயினில் தான் எடுக்க போறதாய் வெளிவந்திச்சு டீசெரிலும் ஸ்பெயினில் எடுத்த காட்சிகள் தான் இருக்கு.
நரேஷும், நதியாவும் அவரது பெற்றோராக நடிக்கிறார்கள். இப்படத்தில் கமல் காமராஜு மற்றும் பானுஸ்ரீ கீர்த்தியின் உடன்பிறப்புகளாகவும், ராஜேந்திர பிரசாத் அவரது தாத்தாவாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் இசையை தமன் எஸ் வழங்கியுள்ளார், அதன் ஒரு காட்சி மிஸ் இந்தியா டீஸரில் காட்டப்பட்டுள்ளது.
மகாநதி படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதால் படம் மீது அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.