மிரட்டியது ஹொட்சொட் பணிந்தது பமிலியன்ஸ் அணி
அரியாலை திருமகள் சன சமூக நிலையம் தமது 67வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட அமரர் கந்தையா அரியரட்ணம் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான வலைப்பந்தாட்டத் தொடரில் ஹொட்சொட் தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணி சம்பியனாகியது.
இதன் இறுதியாட்டம் இன்று
சனிக்கிழமை அரியாலை திருமகள் சன சமூக நிலைய மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் ஹொட்சொட் அணியை எதிர்த்து பமிலியன்ஸ் அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஹொட்சொட் அணியினரின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பமிலியன்ஸ் அணி திணறியது. இதனால் ஆட்ட நேர முடிவில் ஹொட்சொட் அணி 35:7 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியனாகியது.
இதில் அமுதினி ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்