Thu. May 21st, 2026

மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு! கிளிநொச்சியில் இன்று காலை துயரம்.

கிளிநொச்சி- திருநகர் பகுதியில் மாட்டு தொழுவத்தில் மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

இன்று காலை 7.30 அளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 28 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மாட்டுப்பட்டியை துப்பரவு செய்யும் போதே

குறித்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். அந்த பகுதி கிணற்றில் பயன்படுத்தப்பட்ட மின்சார நீர்பம்பியில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என

பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed