4 கால் பகுதிகளாக நடைபெற்ற ஆட்டத்தில் முதல் இரு கால்பகுதி ஆட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்திய கொழும்பு பல்கலைக் கழக 8:7, 18:15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தனர். ஆனால் அடுத்த மூன்றாவது கால்பகுதியாட்டத்தில் தமது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யாழ் பல்கலைக்கழக அணி 26:24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் நான்காவது கால்பகுதியாட்டத்தில்
இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இதனால் வழங்கப்பட்ட நிமிடத்தில் இரு அணிகளும் 34:34 என்ற சம புள்ளிகள் பெற்றிருந்தனர். இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்கு மேலதிகமாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் யாழ் பல்கலைக்கழக அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46:42 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினர்.