Sat. Feb 15th, 2025

மாவை சேனாதிராஜா காலமானார்.. அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி.!

இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னை நாள் தலைவரும், முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலினை யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால் தலையில் உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்ட நிலையில் மாவை சேனாதிராஜா அவர்கள் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்