Thu. May 21st, 2026

மாவட்ட கயிறு இழுத்தலில் உடுவில் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலக அணிகள் சம்பியன்

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்ட செயலக விளையாட்டு பிரிவினரால் நடாத்தப்பட்ட கயிறு இழுத்தல் போட்டியில் உடுவில் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலக அணிகள் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்ட செயலக விளையாட்டு பிரிவினரால் நடாத்தப்பட்ட ஆண்கள் பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டிகள் இன்று சனிக்கிழமை கோப்பாய் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இதில் ஆண்களுக்கான போட்டியில் உடுவில் பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தையும் கரவெட்டி பிரதேச செயலக அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
பெண்களுக்கான போட்டியில் சாவகச்சேரி பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தையும் கோப்பாய் பிரதேச செயலக அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed