மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியர்களின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டு

மானிப்பாய் இந்துக்கல்லூரி வீதி ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவனுக்கு வெற்றி பரிசில்களுக்கு மேலதிகமாக இல்ல ஆசிரியர்களால் துவிச்சக்கர வண்டி வழங்கி கௌரவித்துள்ளனர்.
மானிப்பாய் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு இல்லங்களுக்கு இடையிலான மரதன் ஓட்டம் நடைபெற்றது. இதில் மாணிக்கம் இல்லத்தைச் சேர்ந்த யுனாத் முதலாம் இடத்தைப் பெற்றார். இவருக்கான முதல் பரிசாக கல்லூரி சமூகத்தால் 15 ஆயிரம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக குறித்த இல்ல ஆசிரியர்கள் இணைந்து மாணவனை ஊக்கப்படுத்தும் வகையில் துவிச்சக்கர வண்டியை வழங்கி கொளரவித்தனர் இந்த ஆசிரியர்களின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.