மாந்தை கிழக்கில் பாரம்பரிய உணவு கண்காட்சி
சுதேச மருத்துவ திணைக்களத்தின் அனுசரனையுடன் மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் நடாத்திய பாரம்பரிய உணவுக்கண்காட்சி நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

முன்பள்ளி ஆசிரியர்களால் உள்ளூரில் கிடைக்கக்கூடியதும் போசனைப் பெறுமானம் கூடியதுமான உணவுப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் நடாத்தப்பட்ட முன்பள்ளி சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதி மதிப்பீட்டில் வெற்றி பெற்ற முன்பள்ளிகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.