மாத்தறையில் சஜித் தலைமையில் பாரிய பொது கூட்டம்

ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய பொது கூட்டமொன்று கட்சியின் துணைத்தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் மாத்தறையில் சனத் ஜெயசூர்யா விளையாட்டரங்கில் இடம்பெற்றுவருகின்றது. இந்த பொது கூட்டம் அமைச்சர் மங்கள சமரவீரவால் ஒழுங்குசெய்யப்படுள்ளது.
இதன் பொது கருத்து தெரிவித்தஎ அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ , இந்த கூட்டம் துணை தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.
கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர் அரசியல் வாதிகளின் கோரிக்கைக்கிணங்கவே இந்த பொது கூட்டம் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். பெரும் திரளான மக்கள் இந்த கூட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றார்கள்.
இந்த கூட்டத்தை குழப்பும் நோக்கில் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் இரவு விருந்துக்கு அழைப்பு விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே ஹரின் பெர்னாண்டோ தலைமையில் பதுளை மாவட்டத்தில் கடந்த வாரம் ஒரு பொது கூட்டம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.