Thu. May 21st, 2026

மாட்டுடன் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்து! இராணுவ சிப்பாய் பலி.

ஓமந்தை கமநலசேவை நிலையம் முன்பாக மாட்டுடன் மோதி இராணுவ சிப்பாய் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்திருக்கின்றாா். இந்த சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது.

ஓமந்தை பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று  நேற்று இரவு 7.30மணியளவில் ஓமந்தை கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் பணியாற்றுகின்ற 41 வயதுடைய மதுரசிங்க என்ற இராணுவ வீரர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

வைத்திய பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed