Sat. Apr 11th, 2026

மாகாண மட்ட நீச்சல் யாழ் மாவட்டம் பதக்க வேட்டை

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட நீச்சல் போட்டி யாழ் மாவட்ட  ஆண்கள் பெண்கள் அணியினர் 62 பதக்கங்களை கைப்பற்றி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
வடமாகாண மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான நீச்சல் போட்டி கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் நடைபெற்றது.
இதில் ஆண்களுக்கான போட்டியில் யாழ் மாவட்ட அணியினர் 17 தங்கப் பதக்கங்கள், 10 வெள்ளிப் பதக்கங்கள், 8 வெண்கல பதக்கங்கள் உட்பட 35 பதக்கங்களை கைப்பற்றி
முதலாம் இடத்தையும்,
கிளிநொச்சி மாவட்ட அணியினர்
7 வெள்ளி பதக்கங்கள் 7 வெண்கல பதக்கங்கள் உட்பட 14 பதக்கங்களை கைப்பற்றி
இரண்டாம் இடத்தையும்,
வவுனியா மாவட்ட அணியினர்
2 வெண்கல பதக்கங்களை கைப்பற்றி மூன்றாம் இடத்தை பெற்றனர்.
பெண்களுக்கான போட்டியில்
யாழ் மாவட்ட அணியினர்
14 தங்கப் பதக்கங்கள், 7 வெள்ளி பதக்கங்கள், 6 வெண்கல பதக்கங்கள் உட்பட 27 பதக்கங்களை கைப்பற்றி
முதலாம் இடத்தினையும்
கிளிநொச்சி மாவட்டம் 2 தங்கப் பதக்கங்கள் 6 வெள்ளி பதக்கங்கள்,
5 வெண்கல பதக்கங்கள் உட்பட 13 பதக்கங்களை கைப்பற்றி
இரண்டாம் இடத்தினையும்,
வவுனியா மாவட்ட அணியினர்
2 வெள்ளி பதக்கங்கள் 4 வெண்கல பதக்கங்கள் உட்பட 6 பதக்கங்களை கைப்பற்றி மூன்றாம் இடத்தினையும் பெற்று கொண்டனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed