Tue. Sep 8th, 2026

மாகாண மட்ட டெனிஸ், உரும்பிராய் இந்துக் கல்லூரி பெண்கள் அசத்தல்

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட டெனிஸ் போட்டியில் உரும்பிராய் இந்துக் கல்லூரி  பெண்கள் அணியினர் சம்பியன் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட பெண்களுக்கான டெனிஸ் போட்டிகள் அண்மையில்
யா/சென் ஜோன்ஸ் கல்லூரியிலும், சுண்டுக்குழி மகளிர் கல்லூரியிலும் நடைபெற்றது.
இதில் உரும்பிராய் இந்துக் கல்லூரியானது 20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் சம்பியன் கிண்ணத்தையும், 17 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் சிறந்த வீராங்கனையாக உரும்பிராய் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த த.கஸ்தூரி தெரிவு செய்யப்பட்டார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed