மாகாண மட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ் மாவட்ட அணி இரு பிரிவுகளிலும் சம்பியன்
வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடாத்திய மாவட்ட அணிகளுக்கு இடையிலான மாகாண மட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ் மாவட்ட அணி இரு பிரிவுகளிலும் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடாத்திய மாவட்ட அணிகளுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகள் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ் பழைய பூங்கா கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.

பெண்களுக்கான போட்டியில் யாழ் மாவட்ட அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 58:10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். மன்னார் மாவட்ட அணி இரண்டாம் இடத்தையும், வவுனியா மாவட்ட அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

ஆண்களுக்கான போட்டியில் யாழ் மாவட்ட அணி சம்பியன் கிண்ணத்தையும் முல்லைத்தீவு மாவட்ட அணி இரண்டாம் இடத்தையும் வவுனியா மாவட்ட அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.