Sat. May 16th, 2026

மாகாண மட்ட குத்துச்சண்டை அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி மாணவி வரலாற்றுச் சாதனை

வடமாகாண  பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச் சண்டைப் போட்டியில் அச்சுவேலி யா/புனித தெரேசாள் மகளிர் கல்லூரி மாணவி ர.ஹபிதா தங்கப் பதக்கத்தை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டி கடந்த திங்கட்கிழமை முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில்  நடைபெற்றது.
 இக் குத்துச் சண்டைப் போட்டியில் அச்சுவேலி யா/புனித தெரேசாள் மகளிர் கல்லூரி மாணவி  18 வயதுப்பிரிவில் 54-57 கிலோ  எடைப் பிரிவில் பங்கு பற்றி
 ர.ஹபிதா இறுதிசுற்றில் மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவியை எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். பாடசாலை வரலாற்றில் குத்துச்சண்டையில் பதக்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed