Thu. Mar 12th, 2026

மாகாண மட்ட கபடி சென் தோமஸ் ரோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை வரலாற்று சாதனை

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட கபடிப் போட்டியில் பருத்தித்துறை சென் தோமஸ் ரோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட கபடிப் போட்டி கடந்த புதன்கிழமை நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
17 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான இறுதிப் போட்டியில் பருத்தித்துறை சென் தோமஸ் ரோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை அணியை எதிர்த்து வவுனியா மடுகந்த தேசிய பாடசாலை அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆட்ட நேர முடிவில் பருத்தித்துறை சென் தோமஸ் ரோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30:21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். பருத்தித்துறை சென் தோமஸ் ரோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை கபடிப் போட்டியில் மாகாண மட்டத்தில் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed