Tue. Jun 9th, 2026

மஹிந்த – மைத்திரி திடீர் சந்திப்பு!!

ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அடுத்த வாரமளவில் முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளதாக கட்சி வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டணி அமைப்பது தொடர்பாக நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளன.

அந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் அடுத்த கட்டமாக எவ்வாறு இணைந்து செயற்படுவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed