Fri. Jan 17th, 2025

மஹிந்தவை மலினப்படுத்தினராம். 7 ஆண்டுகளின் பின் 8 ஊடகவியலாளா்கள் விடுதலை.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை இழிவுபடுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட் டிருந்த 8 இணைய ஊடகவியலாளா்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.

நேற்றய தினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் இவா்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். 2012ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவை இழிவுபடுத்தியதாக இவா்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு

புலனாய்வு பிாிவினால் இவா்கள் கைது செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 2013ம் ஆண்டு இவா்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனா்.

எனினும் வழக்கு தொடா்ந்து நடைபெற்றுவந்த நிலையில் நேற்றய தினம் இவா்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள னா் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்