மழை தொடரும்!! -வளிமண்டலவியல் திணைக்களம்-
நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமைய கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் மாலை வேளையில் மழை பெய்யக்கூடுவதுடன், சில பிரதேசங்களில் 75 மில்லி மீற்றர் அளவான மழை பெய்யலாம் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதனுடன் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளுடன், புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளிலும் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.