மலையகத்தில் கொடூரம், பெற்ற தாயை தனது மகனுடன் சேர்ந்து கொன்ற மகன்.
ஹட்டன் வட்டவலை விக்டன் தோட்டபகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 81 வயதுடைய பெண்ணின் சடலத்தை அவரது மகனும் பேரனும் முச்சக்கர வண்டியில் ஏற்றி சென்றதாக கூறப்பட்ட நிலையில் , குறித்த பெண்ணின் சடலம் இன்று வெள்ளிகிழமை அவர்களது வீட்டுக்கு பின்பக்கம் உள்ள கிணற்றிலிருந்து மீட்கபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது குறித்த பெண்ணின் சடலம் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் மீட்கபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலத்தை தேடி விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாருக்கு குறித்த பெண்ணின் இரண்டாவது பேரனான கோபால கிருஸ்னண் வயது 08 வழங்கிய தகவலில் , தனது பாட்டியை தனது தந்தையும் அண்ணனும் தடியால் அடித்து கொன்றதாகவும், தனது பாட்டியின் கண்களில் இருந்து இரத்தம் வந்ததை தான் கண்டதாகவும் , பின்னர் பாட்டியை பொதி ஒன்றில் கட்டி தந்தையும் அண்ணனும் எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளான்.
இதையடுத்து முதலில் பிரதான சந்தேக நபரின் மனைவியை கைது செய்து விசாரனை மேற்கொண்டநிலையில் ,நேற்று இரவு மகனும் மற்றுமொரு பேரனும் கைது செய்யபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
இந்த சம்பவத்தினால் குறித்த பெண்ணின் மகன் மருமகள் மற்றும் பேரபிள்ளை ஆகியோர் கைது செய்யபட்டுள்ளார்கள். பெண்ணின் சடலம் தற்போது சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை பெரவதற்காக டிக்கோயா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூன்றுபேரையும் ஹட்டன் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான ஏற்பாட்டடை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்