Wed. Sep 18th, 2024

மலிங்காவின் பந்துவீச்சில் சுருண்ட நியூஸிலாந்து , ஆறுதல் வெற்றியை பெற்ற இலங்கை

இன்று நடந்த மூன்றாவதும் இறுதியுமான T 20 ஆட்டத்தில் இலங்கை ஆணி ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது. முதலில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி துடுப்பாடத்தை தேர்வுசெய்திருந்தது. நிணயிக்கப்பட்ட 20 ஓவ்ர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்களை பெற்றது. இதில் குணதிலக 30 , திக்வெல்ல 24 மற்றும் மதுஷங்க 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரான்ஸ் 4 விக்கெட்டுகளையும் ஆஸ்லே 3 விக்கெட்டுகளையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடவந்த நியூஸிலாந்து அணி மலிங்கவின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்கமுடியாமல் 16 ஓவர் முடிவில் சகல விக்கெட்டுகளையும் 88 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. மலிங்க 4 ஓவ்ர்கள் பந்துவீசி 6 ஓட்டங்களை மட்டும் கொடுத்து ஹட்ரிக்விக்கெட் அடங்கலாக 5 விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டார்.  இதன்மூலம் தொடரை நியூஸிலாந்து அணி 2-1 நிலையில் தொடரைவென்றது. இலங்கை ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்தது. ஆட்ட நாயகனாக மலிங்க தெரிவு செய்யப்பட்டார்.

இந்த போட்டியின் மூலம் மலிங்க இரு சாதனைகளை தட்டிசென்றுள்ளார் . இதில் மலிங்க தொடர்ந்து 4 பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 5 தடவை ஹட்ரிக் விக்கெட்டுகளை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையையும் தட்டிச்சென்றார். மேலும் இந்த போட்டியின்மூலம் இரண்டு தடவைகள் தொடர்ந்து 4 பந்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் தனதாக்கி கொண்டார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்