Wed. Jul 16th, 2025

மற்றவா்களை விமா்சிக்கும் தகுதி கோட்டாவுக்கு கிடையாது. சீறும் ஜே.வி.பி.

கோட்டபாய ராஜபக்ஸ மற்றவா்களை விமா்சிக்க முடியாது, விமா்சிக்கும் தகுதி அவருக்கு கிடையாது. என மக்க ள் விடுதலை முன்னணி உறுப்பினா் லால் காத்த கூறியுள்ளாா்.

தொழில் புரியும் மக்களின் மாநாடு இன்று சுஹததாஸ உள்ளக அரசங்கில் இடம் பெற்றது . இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய நிதி மோசடி, ஜனநாயக   மீறள் உள்ளிட்ட சர்வாதிகார ஆட்சியினை முன்னெடுத்தவர்கள். மீண்டும் மக்களாணையினை பெற்றுக் கொள்வதற்கு நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்கள்

போல தேர்தல் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கடந்த அரசாங்கம் மக்களின்  தேசிய நிதியை  கொள்ளையடித்தது. கடந்த அரசாங்கத்தின் முறையற்ற ஆட்சிக்கு

எதிராகவே 2015ம் ஆண்டு  பாரிய போராட்டத்தின் மத்தியில் நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்தோம்.  கடந்த அரசாங்கத்தின் பிரதி விம்பமாகவே நடப்பு அரசாங்கமும்

தேசிய நிதியை மோசடி செய்தது  இரண்டு பிரதான கட்சிகளின் நிர்வாகமும் உழைக்கும் மக்களின் உழைப்பினை கொள்ளையடித்துள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்