Sun. Oct 6th, 2024

மறவன்புலவில் மீண்டும் குழப்பம், காற்றாலை வேண்டாம் என மக்கள் போராட்டம்.

தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு உட்ப்பட்ட மறவன்புலவு விவசாய கிராமத்தின் எல்லைப் பகுதியில் மக்களின் எதிர்ப்பினையும் மீறி மின் காற்றாலை அமைப்பதற்கான ஆரம்ப வேலைகள் இடம்பெற்று வருகிறது.

இத் திட்டம் தமது பகுதியில் அமைக்க வேண்டாம் என கடந்த இரண்டு வருடங்களாக மக்க எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனாலும் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என இம் மக்களுக்கு பல தரப்புக்களாலும் வாக்குறுதி அளிக்கப்பட்டு வேலைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தது.

ஆனாலும் மீண்டும் இடை நிறுத்தப்பட்டிருந்த வேலைகள் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தமையினால், இம் மக்கள் மாலை 04 மணியளவில் ஒன்று கூடிய மக்கள்.

ஊர்வலமாகச் சென்று ஆரம்பிக்கப்பட்ட வேலைகளை நிறுத்தி உடனடியாக வெளியேறுமாறு கோசங்களை எழுப்பினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்