Mon. Feb 10th, 2025

மர்மப் பொதிகளில் கேரளக் கஞ்சா

பத்தேகம பகுதியில் சந்தேகத்திற்கு இடமான 3 பொதிகளை வீசிச் சென்ற நபரை பொலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

பத்தேகம பகுதியில் சந்தேகத்திற்கு இடமான 3 பொதிகளை காரில் சென்ற நபர் வீசி விட்டுச் சென்றுள்ளார். இதனை அவதானித்த அப்பகுதி பிரதேச மக்களில் ஒருவர் பொலீஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். பொதிகளை பரிசோதித்த போது அப்பொதிகளில் கேரளாக் கஞ்சா இருப்பதை அவதானித்துள்ளனர். விசாரணைகளை முடுக்கி வட்ட பொலீஸார் வாகனத்ணின் இலக்கத்தை வைத்து தெற்கு நெடுஞ்சாலை வீதியில் பயணித்த வாகனம் எனக் கண்டுபிடித்து குறித்த நபரை கைது செய்து பத்தேகம நீதிமன்றில் ஆயர்படுத்தியுள்ளனர். விசாரணைகளை மேற்கொண்ட நீதிவான் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்