Sat. Apr 11th, 2026

மருமகனால் மாமியார் வெட்டிக் கொலை மாமனார் படுகாயம் – கரவெட்டியில் சம்பவம்

மருமகனின் வெட்டுக்கு இலக்காகி மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மாமனார் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பெரிய தோட்டம் கரவெட்டி மத்தி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யோகராஜா சரஸ்வதி (வயது 67) என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது கணவரான
காசிப்பிள்ளை யோகராஜா என்பவர் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
குடும்ப தகராறு காரணமாக கரவெட்டி மத்தி கரவெட்டி பகுதியில் வசித்து வந்த தனது மனைவியின் தாயாரை வெட்டிக் கொலை செய்து விட்டு பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் யூஸ் கடை வைத்திருந்த மனைவியின் தந்தையையும் வெட்டியுள்ளார். அதன் பின்னர் காயமடைந்த யோகராஜா என்பவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed