மருந்தக நடைமுறைகளைப் பின்பற்றாத மருந்தகத்திற்கு 60 ஆயிரம் ரூபா அபராதம்
அண்மைக்காலமாக கரவெட்டி சுகாதார பணிமனைக்குட்பட்ட மருந்தகங்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் பரிசோதிக்கப்பட்ட மருந்தகமொன்றில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கமைய சமுதாய மருந்தக நடைமுறைகளை கடைப்பிடிக்காது இயங்கி வந்ததுடன், விற்பனை செய்த மருந்துகளுக்கான பதிவேட்டினை முறையாக பேணாதமையும் அவதானிக்கப்பட்டது. எனவே மேற்படி மருந்தகத்திற்கெதிராக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் இரு வேறு பிரிவுகளில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரியினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது மருந்தக மருந்தாளர் குற்றங்களை ஒப்புக் கொண்டதையடுத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தி னால் ரூ 60000 தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.