மருத்துவா் சிவரூபன் மட்டக்களப்பு கொண்டு செல்லப்பட்டது ஏன்? ஆயுதங்கள் மீட்பா?
தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மருத்துவா் சி.சிவரூபன் இன்றைய தினம் மட்டக்களப்புக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளாா்.
கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வரும் வைத்தியர் சிவரூபன் தெரிவித்ததாக கூறி வடபகுதியில் ஆயுதங்கள் பல மீட்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது அவரை மட்டக்களப்பிற்கு கொண்டு சென்றுள்ளமை ஆயுதங்களை மீட்பதற்காக என கூறப்படுகிறது.
இருந்தும் மட்டக்களப்பிற்கு சிவரூபன் அழைத்து செல்லப்பட்டுள்ளதால் விடுதலை புலிகள் மீள் உருவாக்கம் என்ற பெயரில் கிழக்கில் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.