Thu. May 30th, 2024

மருத்துவத்துறை விளையாட்டின் அபிவிருத்திக்கு நவீன பங்களிப்பினை வழங்க தயார் என என்புகள் முறிவுகள் சத்திர சிகிச்சை நிபுணர்  வைத்திய கலாநிதி கோபிசங்கர் தெரிவித்துள்ளார்.

மருத்துவத்துறை விளையாட்டின் அபிவிருத்திக்கு நவீன பங்களிப்பினை வழங்க தயார் என என்புகள் முறிவுகள் சத்திர சிகிச்சை நிபுணர்  வைத்திய கலாநிதி கோபிசங்கர் தெரிவித்துள்ளார்.

உடற்கல்வி டிப்ளமோ ஆசிரிய சங்கத்தினருக்கும் என்புகள் முறிவுகள் சத்திர சிகிச்சை நிபுணர்   வைத்திய கலாநிதி கோபிசங்கருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கம் விளையாட்டின் வளர்ச்சியை நிகழ்காலத்தில் எப்படி தக்கவைத்து கொள்வது. எதிர்காலத்தில் எவ்வாறு வழிநடத்தி செல்ல வேண்டும் என்ற கருத்தாடலில்  விளையாட்டில் மருத்துவம் உள்ளது என்பதை மக்கள் மயப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கேட்டதிற்கு இணங்க தங்களால் ஆன முழுப்பங்களிப்பையும் செய்வதாக என்புகள் முறிவுகள் சத்திர சிகிச்சை நிபுணர்   வைத்திய கலாநிதி கோபிசங்கர் மற்றும் விளையாட்டு மருத்துவத் துறையின் வைத்தியர் கஜேந்திரன் உறுதியளித்தனர். விளையாட்டின் முக்கியத்துவம் சிறுவர்களில் இருந்து விருத்தகர் வரை கட்டாயமாக விளையாட்டில் ஈடுபடுத்துதல், பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்களை உபாதைகளில் இருந்து தடுத்தல், அதற்கான ஆலோசனை வழங்கல், தொற்றா நோய்களில் இருந்தும் உளநெருக்கீட்டில் இருந்தும் மாணவர்களை விடுவித்தல், ஆரோக்கியம் வீழ்ச்சியடையும் போதே கற்றலில் வீழ்ச்சி ஏற்படுகின்றது என்பதை பெற்றோருக்கு தெளிவுபடுத்தல், ஆரம்பப் பிரிவு மாணவர்களின் உடல் உள ஆரோக்கியத்தைப் பேணல் போன்ற செயல்பாடுகளை முன்னிறுத்தி கருத்தாடல் நடைபெற்றது. அத்துடன் யாழ் போதனா வைத்தியசாலையில் விளையாட்டு மருத்துவத்திற்கு என தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் ஈடுபடுபவர்கள் சிரமமின்றி சிகிச்சையையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்