Sat. Feb 15th, 2025

மருதங்கேணி LB Finance இல் ஊழல் மோசடி, முறைப்பாடுகள் எதுவுமின்றி அடிமட்ட ஊழியர்கள் மருதங்கேணி பொலிஸாரால் விசாரணை செய்யப்பட்டமைக்கு பல தரப்பினரும் விசனம்

மருதங்கேணி LB Finance இல் ஊழல் மோசடி, முறைப்பாடுகள் எதுவுமின்றி அடிமட்ட ஊழியர்கள் மருதங்கேணி பொலிஸாரால் விசாரணை செய்யப்பட்டமைக்கு பல தரப்பினரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி
LB Finance நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ள ஒருதொகை நகைகள் களவு போயுள்ளதாகவும் இந்த சம்பவம் கடந்த 02.01.2025 அன்று கிளை முகாமையாளருக்கு தெரியவந்ததை தொடர்ந்து நேற்றையதினம் வரை மௌனம் காத்த முகாமையாளர் நேற்றையதினம்(08) அதாவது ஆறு நாட்களுக்கு பின்பு மருதங்கேணி பொலிஸாரிடம் சட்ட ரீதியான முறைப்பாடுகள் எதுவுமின்றி வாய்மூலம் தெரிவித்துள்ளார்.
தெரிவித்ததை தொடர்ந்து நேற்றையதினம் நிறுவனத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிஸார் நிறுவனத்தில் பணிபுரியும் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை சார்ந்த ஊழியர்களை மாத்திரம் நிறுவனத்தில் வைத்து விசாரித்ததாகவும் களவாடப்பட்ட குறித்த நகைகளின் பெறுமதியான
ரூபா 2 250 000/= பணத்தை குறிப்பிட்ட மருதங்கேணி பிரதேசத்தை சார்ந்த ஐந்து ஊழியர்களையும் ஒரு நபருக்கு
ரூபா 450 000/= வீதம் நிறுவனத்திற்கு வழங்குமாறு கூறி ஒரு ஊழியரின் தொலைபேசி மற்றும் ஐவரின் தேசிய அடையாள அட்டைகள் என்பவற்றையும் பெற்று சென்றுள்ளனர்.
இன்றையதினம்(09) குறித்த ஊழியர்கள் பணத்தை வழங்காத காரணத்தினால் நிறுவனத்திற்கு வருகைதந்த பொலிஸார் முறைப்பாடுகள் எதுவும் இல்லாத போதும் நான்கு பெண்கள் உட்பட்ட குறித்த ஐந்து ஊழியர்களையும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கூட இல்லாமல் பொலிஸ் வாகனத்தில் இன்று காலை 11.30 அளவில் அழைத்து சென்று இரவு 07.00 மணி வரை விசாரணைக்கு உட்படுத்தி விடுவித்துள்ளனர்.
குறித்த விசாரணையில் நாளை காலை 11.00 மணிக்கு முன்பதாக அனைவரும் பணத்தை வழங்க வேண்டும் என்றும் அல்லது கே.கே.எஸ் பொலிஸ் நிலையத்தில் ஊழியர்களை ஒப்படைப்பதாகவும் தெரிவித்ததோடு நிறுவனத்தில் CCTV உள்ளது அதை பரிசோதித்து எடுத்தவரை கண்டுபிடியுங்கள் நாங்கள் பணம் தரமுடியாது என்று ஊழியர்கள் மறுத்தமைக்கு CCTV உடனே பார்க்க முடியாது நீங்கள் முதலில் நாளை பணத்தை கொடுங்கள் பிறகு CCTV பார்த்து எடுத்தவரை கண்டுபிடித்து உங்கள் பணத்தை திரும்ப தருகின்றோம் என்றும் பொறுப்பு இல்லாமல் கூறியதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும் இன்றைய தினம் நேற்று பெறப்பட்ட ஐந்து ஊழியர்களின் தேசிய அடையாள அட்டைகள் மீள வழங்கப்பட்டதோடு ஒரு ஊழியரின் குறித்த தொலைபேசி ஆனாது வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
குறித்த விசாரணையின் போது வங்கி முகாமையாளர் மற்றும் நிறுவனத்தின் மாவட்ட பிராந்திய முகாமையாளர் என்போர் பொலிஸ் நிலையத்தில் உடன் இருந்தனர் அவர்களிடம் குறித்த விடயம் தொடர்பாக எமது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது நாங்கள் முறைப்பாடு வழங்கவில்லை என்றும் எதுவாயினும் பொலிஸாரிடம் கேட்டு அறிந்து கொள்ளுமாறும் கூறி மேலதிக தகவல்களை வழங்க மறுத்து சென்றனர் .
சரியாக தங்கள் மீது முறைப்பாடு செய்து விசாரித்து சரியான தீர்வை வழங்குமாறும் நிறுவன ஊழியர்களும் பொலிஸாரும் இணைந்து தங்களை பணத்தை தருமாறு மிரட்டுவதாகவும் தவறு செய்யாமல் தாங்கள் பணத்தை வழங்க போவதில்லை என்றும் CCTV மூலம் எடுத்தவரை கண்டு பிடிப்பதற்கு ஏன் தயக்கம் காட்டுகின்றார்கள்? என்று தெரியவில்லை என்றும்
இதற்கான தீர்வை முறையாக சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாகவும் நிறுவனத்தின் மேல்மட்ட அதிகாரிகள் மற்றும் மருதங்கேணி பொலிஸார் இணைந்து தங்களை மிரட்டுவதாகவும் நிறுவனம் தங்கள் மீது சட்டரீதியான முறைப்பாடு செய்யாமல் பொலிஸாருடன் வாய்மூலம் உடன்படிக்கை செய்து தான் விசாரணை மேற்கொண்டதாகவும் மருதங்கேணி பிரதேச ஊழியர்களை மாத்திரமே குற்றஞ்சாட்டுவதாகவும் பொலிஸ் நிலையம் அழைத்து விசாரித்ததாகவும் கிளையின் மேல் மட்ட அதிகாரிகளை விசாரணை செய்யவில்லை என்றும் குறித்த ஊழியர்கள் எமது ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்