Sun. Sep 15th, 2024

மரதானைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையே இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதல்

இன்று (28) காலை கொழும்பு கோட்டை மற்றும் மரதானை ரயில் நிலையங்களுக்கு இடையே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இந்த சம்பவம் காரணமாக, பிரதான புகையிரத பாதையில் பயணிக்கும் ரயில்கள் தடைபட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபத்தை நோக்கி சென்ற 412 இலக்க புகையிரதமும் மாரதானையில் இருந்து களுத்துறை நோக்கி புறப்பட்ட 741 இலக்க மற்றொரு புகையிரத்துடன் நேருக்கு நேர் மோதியது.

இந்த சம்பவத்தில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று இலங்கை புகையிரத சேவைகள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்