Mon. Oct 7th, 2024

மரண வீட்டிலிருந்து வந்தவா்களுக்கு நடந்த கதி. 18 போ் படுகாயம், 3 சிறுவா்கள் அவசர சிகிச்சை பிாிவில்.

நாவலப்பிட்டியில் மரண சடங்கு ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பேருந்து வேக கட்டுப்பட்டி னை இழந்து விபத்துக்குள்ளானதில் 18 போ் படுகாயமடைந்துள்ளனா்.

திருகோணமலை- கித்துள் ஊற்று பகுதியில் நேற்று இரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.  கந்தளாயில் இருந்து நாவலப்பிட்டி பகுதிக்கு மரண வீடொன்றுக்கு சென்று விட்டு

மீண்டும் கந்தளாய் சென்றவர்கள் பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது. இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான மூன்று சிறுவர்கள்

அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழையும், வேகமுமே விபத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்