மரண தண்டனைக்கு எதிரான தனிநபர் பிரேரணையை ஆதரித்து உச்ச நீதிமன்றில் மனு
மரணதண்டனையை தடை செய்யுமாறு பாராளுமன்றில் தாக்கல் செய்யப்படட தனி நபர் பிரேரணை இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறவில்லை என்று அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொடாவினால் மரண தண்டனையை தடைசெய்யுமாறு தனி நபர் பிரேரணை கடந்தவாரம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூடம் ஒன்றில் பேசும்போது , இது இலங்கை அரசியல் அமைப்புக்கு எதிரான பிரேரணை என்று தனக்கு சட்டமா அதிபர் தெரிவித்ததாக கருத்து வெளியிட்டு இருந்தார். இதனாலேயே இன்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.