மணல் கொள்ளையா்களை காத்திருந்து வேட்டையாடிய பொலிஸாா்.
கிளிநொச்சி- பளை பொலிஸ் பிாிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம் 14 வாகனங்களையும், 14 சாரதிகளை யும் பொலிஸாா் கைது செய்துள்ளனா்.
கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அனுமதிப்பத்திரங்கள் இன்றியும் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறியும் போலி அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி
மணல் கொண்டு சென்றமை போன்ற குற்றச்சாட்டுக்களில் 13 டிப்பர் வாகனங்களும் ஒரு உழவு இயந்திரமும் அதன் சாரதிகளும் பளைப்பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யபப்ட்டுள்ளவர்களையும் டிப்பர் வாகனங்களையும் நாளைய தினம் (18) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும்
பளைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.