Thu. Sep 17th, 2026

மன்/தேவன்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவி அ.அலெக்ஸ்னி வரலாற்றுச் சாதனை

மன்/தேவன்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவி வடமாகாண மெய்வல்லுநர் போட்டியில் அ.அலெக்ஸ்னி பாடசாலையின் வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளார்.
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் அண்மையில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 18 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டத்தில் மன்/தேவன்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவி அ.அலெக்ஸ்னி  வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவாகியதோடு பாடசாலையின் வரலாற்றுச் சாதனை பதிவு செய்துள்ளார்.
பாடசாலை ஆரம்பமாகி 75 வருடங்கள் நிறைவில் முதன் முறையாக மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவாகி உள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
இவர் மாகாண மட்ட மரதன் ஓட்ட போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டியதோடு வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டியில்  18 வயதின் கீழ் பெண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் 4ம் இடத்தையும் பெற்று பாடசாலைகளுக்கு பெருமை சேர்த்துள்ளார். பாடசாலை முதல்வர் வை.விஜிதரன் அவர்களின் வழிகாட்டலில் பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் ரி.இன்பதாசன் அவர்களின் பயிற்சியில் குறித்த மாணவி வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply