Thu. May 21st, 2026

மன்னாரில் மாணவர்களுக்கான கல்வி முன்னேற்றத்திற்கு இராணுவம் உதவி.

மன்னாரில் வறிய மாணவர்களுக்கான கல்வி முன்னேற்றத்தை நோக்காகக் கொண்டு கற்றல் உபகரணங்கள், புத்தகப் பை மற்றும் காலணிகள் வைபவ ரீதியாக படைத்தரப்பினரால் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் பேசாலை புனித பற்றிமா மத்திய மகா வித்தயாலயத்தின் அரங்க மண்டபத்தில் குறித்த நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில்  இடம் பெற்றது.
 மன்னார் தீவுப்பகுதிகளிள் உள்ள 10 பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 112 மாணவர்களுக்குமான பாடசாலைக் கற்றல் உபகரணங்கள் மன்னார் தள்ளாடி 54 ஆவது  கட்டளைப்பணியக தலைமை அதிகாரி பிரிகேடியர் சுபாசன வெளிகல பணிப்புரைக்கமைவாக அவரின் தலமையில் 543 ஆவது கட்டளைத்தலமையக அதிகாரி கேணல் மங்கள மாயா துண்ண அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது .
 
இதில் சர்வமதத்தலைவர்கள் மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் உற்பட அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

About The Author

Share This:

Leave a Reply

You may have missed