Sat. Jun 14th, 2025

மனைவி மது அருந்த வேண்டாம் என்று தடுத்ததால் கணவன் பெற்றோலை ஊற்றி தனக்கு தானே தீமூட்டி உயிரிழப்பு

மனைவி மது அருந்த வேண்டாம் என்று தடுத்ததால் கணவன் பெற்றோலை ஊற்றி தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கள்ளப்பாடு – முல்லைதீவைச் சேர்ந்த மரியதாஸ் பற்றிக்ஜோன்சன் (வயது 47) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 15ஆம் திகதி குறித்த நபர் வீட்டில் சாப்பிட்டு விட்டு மது அருந்துவதற்காக வெளியே சென்றபோது அவரை அவரது மனைவி தடுத்துள்ளார். இதன்போது அத்துமீறி கடற்கரைக்கு சென்ற அவர் வள்ளத்தின் எஞ்சினுக்காக வைத்திருந்த பெற்றோலை எடுத்து உடலில் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
இந்நிலையில் அவர் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அன்றையதினமே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்