மனைப்பொருளியல் டிப்ளமோ மாணவிகளின் ஆக்கத்திறன் கண்காட்சி
வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுமதியுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் நடாத்தப்படும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் கல்வி கற்று வெளியேறிய மனைப்பொருளியல் டிப்ளமோ மாணவிகளின் ஆக்கத்திறன் கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு திக்கம் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி.கஜானி பார்த்தீபன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் வேலுப்பிள்ளை விஸ்வலிங்கம், யாழ் மாவட்ட செயலக மாவட்ட கிராம கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சுனேத்ரா சுதாகர் ஆகியோரும், கெளரவ விருந்தினர்களாக முன்னாள் யாழ் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் நா.பஞ்சலிங்கம், அல்வாய் மேற்கு கிராம சேவையாளர் செல்வி பாலலோஜினி ரவிச்சந்திரன், திக்கம் மத்திய சன சமூக நிலையத்தின் தலைவர் கந்தசாமி சிவசோதி ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.