Sun. Apr 12th, 2026

மந்திகை வைத்தியசாலைக்கு நெல்லியடி வர்த்தக சங்கம் உதவி

31.03.2020.இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று தவிர்ப்பதற்காக சுகாதார அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்ட அரச வைத்தியசாலைகளில் வாராந்தம் மாதாந்தம் கிளினிக் செல்வோருக்கான மருந்துப்பொருட்கள் அவர்கள் இருக்கும் இடங்களில் விநியோகம் செய்வதற்காக உறைகள். பொலித்தீன் பை ஒட்டும் 2 மிஷின்கள் வைத்தியசாலையில் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தினால்,  நெல்லியடி வர்த்தக சங்கத்திடம்  இலவசமாக வழங்குமாறு மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.  அதற்கு அமைய ஒருதொகுதி பொருட்களை நெல்லியடி வாணிபக்கழகம் இன்று பிற்பகல் வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட பொறுப்பான உத்தியோகத்தர்களிடம் கையளித்தது. நெல்லியடி வர்த்தக சங்க செயலாளர் சுரேரஞ்சன், வர்த்தக சங்கத்தின் பொருளாளர் அருள் ஆகியோர் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் கையளித்தார்கள்

About The Author

Share This:

Leave a Reply

You may have missed