Mon. Aug 10th, 2026

மத்திய வங்கி கட்டிடத்திலிருந்து பாய்ந்த இளைஞர் விவகாரம்!! -விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது-

இலங்கை மத்தியவங்கியின் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த இளைஞர்ச தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் தவறி விழவில்லை எனவும் அவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்தியவங்கியின் மேல் மாடியிலிருந்து 16 வயது இளைஞர் நேற்று முன்தினம் கீழே விழுந்து உயிரிழந்தார்.

இவரின் உயிரிழப்பு தொடர்பில் சந்தேகம் கொண்ட காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதற்கமைய குறித்த இளைஞர் தவறுதலாகவோ அல்லது பிரிதொருவரின் முயற்சியாலேயோ கீழே விழவில்லை எனவும் அவர் தற்கொலை செய்துக்கொண்டே உயிரிழந்துள்ளார் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் மத்திய வங்கியில் கடமையாற்றும் உயர்நிலை உத்தியோகத்தர் ஒருவரின் புதல்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் தற்கொலைக்கு தூண்டுதலாக அவரின் தந்தை செயற்பட்டிருக்கலாம் அல்லது இளைஞரின் ஏதேனும் முயற்சிகளுக்கு தந்தை தடையாக காணப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed