மத்திய வங்கியை கொள்ளையடித்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவோம்

ரணில் -பிரேமதாச கூட்டு ஆட்சியே இன்று நாட்டினை மீண்டும் நாசமாக்கியுள்ளது . இவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் மத்திய வங்கியை கொள்ளையடித்தனர். ஆனால் இந்த கொள்ளையர்களை எமது ஆட்சியில் நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்துவோம் என உறுதியாக கூறுகின்றேன் என்று நேற்று சுகதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேசிய முன்னணியின் தேசிய மாநாட்டில் பேசும்பொழுது எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்
கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவாக்கியது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல. இங்கு இருக்கின்ற அனைவரதும் ஒன்றிணைந்த முடிவாகும். கோத்தபாயவை வெற்றிபெறச்செய்ய அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை இன்று வரை உயர்த்த முடியாத இந்த அரசாங்கம் பாணின் விலையை தீடீரென உயர்த்திவிட்டது. இந்த அரசாங்கத்தின் ஆடையை எமது ஆட்சியில் கழட்டி எறிவோம், மீண்டும் விட்ட இடத்தில் இருந்து எமது பயணத்தை தொடருவோம் என்றும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்