Sun. Nov 10th, 2024

மத்திய கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டு பிரிவின் பணிப்பாளர் நாயகமாக வடமாகாண கல்வி பணிப்பாளர் தி.ஜோண் குயின்ரஸ் நியமனம்

வடமாகாண கல்வி பணிப்பாளர் தி.ஜோண் குயின்ரஸ் அவர்கள் கல்வி திணைக்களத்தில் இருந்து கல்வி அமைச்சுக்கு பதவி உயர்வு கிடைத்து நாளை வெள்ளிக்கிழமை முதல் இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளார்.

இதுவரை காலமும் வடமாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய மத்திய கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டு பிரிவின் பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் 1986ம் ஆண்டு அரச சேவையில் ஆசிரியராக இணைந்து அதிபராக, ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக, உதவிக் கல்விப் பணிப்பாளராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக, 4 வலயங்களின் வலயக் கல்வி பணிப்பாளராக,  மேலதிக மாகாண கல்வி பணிப்பாளராக தற்போது மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். இவர்
கடந்த 01.01.2024 முதல் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு தேசிய பொதுச் சேவை ஆணைக்குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்